கோவை, ஜூலை 14: கோவை மேற்கு மண்டலத்தில் 710 நில மோசடி புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 80 சதவீதம் அரசியல் பிரமுகர்கள் தொடர்புடையது என்று ஐ.ஜி. வன்னியபெருமாள் தெரிவித்தார்.
÷இதுகுறித்து அவர் வியாழக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:
÷கோவை மேற்கு மண்டலத்தில் நில மோசடி புகார்களைப் பெற ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு கூடுதல் எஸ்பி, ஒரு டிஎஸ்பி, 2 இன்ஸ்பெக்டர்கள், 4 சப்-இன்ஸ்பெக்டர்கள், 20 போலீஸôர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
÷இதுவரையில், கோவையில் சுமார் 55 புகார்கள் பெறப்பட்டுள்ளன. ஈரோட்டில் 134 புகார்கள் பெறப்பட்டு, 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருப்பூரில் 76 புகார்கள் பெறப்பட்டு 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
÷மேற்கு மண்டலத்தைப் பொருத்தவரை, நிலமோசடி தொடர்பாக 710 புகார்கள்
பெறப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ. 162.73 கோடியாகும். இதில் 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
÷நில மோசடி புகார்களைப் பெற ஒரு பிரிவும், விசாரிக்க ஒரு பிரிவும், ஆய்வு மேற்கொள்ள, நடவடிக்கை எடுக்க ஒரு பிரிவும், கைது செய்ய மற்றொரு பிரிவும் செயல்பட்டு வருகின்றன.
80 சதவீதம் அரசியல் பிரமுகர் தொடர்பு: இதுவரை பெறப்பட்ட நில மோசடி புகார்களில் 80 சதவீதம் அரசியல் பிரமுகர்கள் தொடர்புடையது. இதில் 60 சதவீதம் மறைமுகமாகவும், 20 சதவீதம் நேரிடையாகவும் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது என்று தெரிவித்தார்.
அவருடன் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.