கோவை, ஜூலை 23: சசி கிரியேடிவ் மேலாண்மைக் கல்லூரியில் "வாடிக்கையாளர் லாபம்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
÷சசி விளம்பர நிறுவனத்தின் கீழ் செயல்பட்டுவரும் சசி கிரியேடிவ் மேலாண்மைக் கல்லூரியில் "வாடிக்கையாளர் லாபம்' குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில்,
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஜே.எல்.கெல்லாக் கல்லூரியின் கணக்கியல் மற்றும் தகவல் மேலாண்மை கெüரவப் பேராசிரியரான சென்னை கிரேட் லேக்ஸ் மேலாண்மை கல்லூரி நிறுவனர் பாலா வி.பாலச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
இன்றைய வர்த்தகச் சூழலான புதிய தயாரிப்புகள், உற்பத்தித் திறன், போட்டியாளர்கள், மாறிவரும் தொழில்நுட்பங்கள் குறித்து அவர் விளக்கினார். தொழில்நுட்பப் புரட்சி காரணமாக மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் விளக்கமளித்தார்.
÷சசி கிரியேடிவ் மேலாண்மை கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் ராஜ்தீபன் சுவாமிநாதன் தலைமை வகித்தார். கல்லூரி நிறுவனர் சுவாமிநாதன், பேராசிரியர் ஜெ.ஸ்ரீகாந்த், கல்லூரி ஆலோசகர் லட்சுமணன், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.