பொள்ளாச்சி, ஜூலை 23: திமுக வழக்கறிஞர் கூட்டம் வெள்ளிக்கிழமை பொள்ளாச்சி செல்வி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
÷இக்கூட்டத்திற்கு பொள்ளாச்சி வழக்கறிஞர் அணியின் அமைப்பாளர் தேவசேனாதிபதி தலைமை தாங்கினார். இதில் நில அபகரிப்பு என்ற பெயரில் திமுக நிர்வாகிகள் மீது வழக்கு தொடுக்கும் தமிழக அரசைக் கண்டித்தும், நித்யானந்த சுவாமிகளின் வழக்கு நீதி மன்றத்தில் நடந்து கொண்டிருக்கும்போது வழக்கு பற்றி பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் பேட்டி தர உதவி செய்யும் அரசைக் கண்டித்தும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
÷திமுக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் தீர்ப்பை அவமதிக்கும் தமிழக அரசைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.