*ஜங்கம சமுதாய நல அமைப்பு, ஈரோடு சுப்ரிம் அரிமா சங்க அறக்கட்டளை, ரத்த வங்கி, ஈரோடு கேன்சர் சென்டர்: ரத்த தானம், ரத்தவகை கண்டறிதல், இலவச பொது மற்றும் புற்றுநோய் தடுப்பு ஆலோசனை மருத்துவ முகாம், நகராட்சிப் பள்ளி, செüடேஸ்வர் திருமண மண்டபம், காலை 9.
சாலையை சீரமைக்கக் கோரி லாரிகள் சிறைப்பிடிப்பு
பவானி, ஜூலை 23: பவானி அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் 18 மணல் லாரிகளை சிறைப்பிடித்து சனிக்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
÷பவானியை அடுத்த வெள்ளித்திருப்பூர், வெண்டிபாளையம், மூங்கில்பாளையம் பகுதிகளில் விவசாய நிலத்திலிருந்து அனுமதி பெற்று அந்தியூரில் உள்ள செங்கல் சூளைகளுக்கு மண் எடுக்கப்பட்டு லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. மண் லாரிகள் தொடர்ச்சியாகச் சென்று வருவதால் மூங்கில்பாளையம், ரெட்டிபாளையம் பகுதியில் கிராம சாலைகள் பெரிதும் பழுதடைந்தது.
÷இச்சாலைகளை சீரமைத்துத் தருமாறும், லாரிகள் செல்வதைத் தடுக்கக் கோரியும் கடந்த சில மாதங்களாகப் பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மேலும் சாலை பழுதடைவதைத் தடுக்க சாலையில் சென்ற 18 மண் லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
÷இதுகுறித்து தகவலறிந்த, பவானி வட்டாட்சியர் வியாசபகவான், அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், கனிமவளத்துறை அலுவலர் பெருமாள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
÷சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுப்பதோடு, கனரக வாகனங்கள் செல்லாமல் தடுக்கவும், மணல் எடுப்பது விதிகளுக்கு உள்பட்டு நடப்பதை கண்காணிப்பதாகவும் அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் கிராம மக்கள் லாரிகளை விடுவித்தனர்.