பி.எச்.டி. படித்தவர்கள் பற்றாக்குறை

கோவை, ஜூலை 23: நமது நாட்டில் பிஎச்டி படித்தவர்கள் இல்லாததால், 40 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று, தமிழக திட்டக் குழு உறுப்பினர் (கல்வி) இ.பாலகுருசாமி தெரிவித்தார். ÷கோவை சி.ஐ.டி. கல்லூர
Published on

கோவை, ஜூலை 23: நமது நாட்டில் பிஎச்டி படித்தவர்கள் இல்லாததால், 40 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று, தமிழக திட்டக் குழு உறுப்பினர் (கல்வி) இ.பாலகுருசாமி தெரிவித்தார்.

÷கோவை சி.ஐ.டி. கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற இயந்திரமயமாக்குதல் தொடர்பான சர்வதேச கருத்தரங்கில் அவர் பேசியது:÷தொழில்துறை மற்றும் கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதை மட்டும் குறிக்கோளாக கொண்டிருக்கக் கூடாது. இந்த இரு நிறுவனங்களுக்கு இடையிலான உறவு என்பது, பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக இருக்க வேண்டும்.

÷அதேபோல கல்வி நிறுவனங்கள் இதுபோன்ற கருத்தரங்குகளுக்கு, தொழில்

நிறுவனங்களை அழைக்க வேண்டும். இதன்மூலம் இரு நிறுவனங்கள் கூட்டாகச் சேர்ந்து செயல்பட ஒரு கருவியாக அமையும். மேலும் ஆராய்ச்சி போன்ற விஷயங்களில் கூட்டு சேர்ந்து முதலீடு செய்ய முடியும். இதனால் இரு நிறுவனங்களும் நல்ல பயன்பெறும்.÷சாமானிய மக்களுக்குச் சென்றுசேரும் வகையில் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி இருக்க வேண்டும். நமது நாட்டில் போதிய பிஎச்டி படித்தவர்கள் இல்லாததால், 40 சதவீத ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது என்றார்.÷சிஐடி கல்லூரி தாளாளர் எஸ்.ஆர்.கே.பிரசாத் கூறியது:

÷புதிய கண்டுபிடிப்புகள் மூலமாகவே இந்தியா சூப்பர்பவர் நாடாக மாற முடியும். கடந்த 20 ஆண்டுகளில் மேற்கத்திய நாடுகளில் புதிய கண்டுபிடிப்புகள் குறைந்து விட்டன. உலகிலேயே சீனாவிலும் இந்தியாவிலும்தான் மனித வளம் அதிகமாக உள்ளது. இந்தியாவில் உள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்துச் செயல்படுவது மிகவும் சவாலான விஷயமாக உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்