கோபி, ஜூலை 23: கோபி மொடச்சூர் சந்தைக்கு வந்திருந்த அரிய இன மாடுகளை கேரளத்துக்கு கொண்டு செல்ல பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
÷மொடச்சூரில் சனிக்கிழமைகளில் மாடு மற்றும் ஆட்டு சந்தை நடைபெறுகிறது. குஜராத் மாநிலத்தின் கிர் இன மாடு ஒன்றும், ஆந்திரா மாநில ஓங்கோல் இன மாடுகள் இரண்டும் வந்திருந்தன.
÷இவற்றையும், 10 நாட்டு மாடுகளையும், ஒரு எருமையையும் லாரியில் கேரளாவிற்கு இறைச்சிக்காக கொண்டு செல்ல இருந்தனர். இதை அறிந்த பொதுமக்கள் திரண்டு வந்து லாரியில் கிர் மற்றும் ஓங்கோல் இன மாடுகளை கீழே இறக்கி கோயில் வளாகத்தில் கட்டி வைத்தனர். மாடுகளின் உரிமையாளர்கள் வரும் வரை மாடுகளை விட மறுத்து விட்டனர்.