ஈரோடு, ஜூலை 23: வளர் இளம்பெண்களுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
÷ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மாரிமுத்து தெரிவித்தது: இத்திட்டம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2,080 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. ÷கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், வளர் இளம் பெண்கள் என பலதரப்பட்ட பெண்களுக்கு பல்வேறு உதவிகள் அளிக்கப்படுகிறது. குறிப்பாக வளர் இளம்பெண்களுக்கு மையத்தில் வைத்து எடை எடுத்தல், வளர்ச்சியைக் கண்காணித்தல், இரும்புசத்து, போலிக் அமில மாத்திரைகள் வழங்குதல், ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரக் கல்வி அளித்தல், இணை உணவின் அவசியம் பற்றி எடுத்துரைத்தல், வாழ்க்கைக் கல்வி அளித்தல், பெண்கள் உரிமை குறித்து எடுத்துரைத்தல், கல்வி மேம்பாடு போன்ற பணிகள் செய்யப்படுகிறது. ÷மத்திய, மாநில அரசின் பங்களிப்போடு செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் வளர் இளம் பெண்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 450 பேருக்கு இந்த பயிற்சி அளிக்கப்படும்.