சத்தியமங்கலம்,ஜூலை 30: ஆடி அமாவாசையையொட்டி பண்ணாரி அம்மன் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனைத் தரிசித்தனர். ÷ஆடி அமாவாசை அம்மனுக்கு உகந்த நாளாகக் கருதப்படுவதால் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோயிலில் சனிக்கிழமை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
÷பெரும்பாலான பக்தர்கள் இரண்டு சக்கர வாகனங்களில் கோயிலுக்கு வந்திருந்தனர். சத்தியில் இருந்து பண்ணாரிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அமாவாசையையொட்டி, வெள்ளிக்கிழமை இரவில் இருந்து பக்தர்கள் நடைப்பயணமாக கோயிலுக்கு வரத்துவங்கினர்.
சனிக்கிழமை அதிகாலை நடந்த சிறப்புப் பூஜையில் ஏராளாமான கர்நாடக பக்தர்கள் கலந்து கொண்டனர். ÷விழாவையொட்டி, அம்மன் சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேர்த்திக்கடனாக பெண்கள் தீபமேற்றி வழிபட்டனர்.
மகளிர் கல்லூரி பேரவை தொடக்கம்
கோபி, ஜூலை 30: கோபி பிகேஆர் மகளிர் கலைக் கல்லூரியின் மாணவர் பேரவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
÷கோவை கலைமகள் கல்வி நிறுவன இயக்குநர் கே.ஏ.சின்னராசு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.÷தலைவராக எ.எஸ்.மோகனப்பிரியா, உதவித் தலைவராக வி.ஜெயசுதா, செயலாளராக டி.கீர்த்தனா, இணைச் செயலராக ஜி.ப்ரியா, பொருளாளராக எம்.அபிநயா, கலைநிகழ்ச்சி திட்ட இயக்குனராக எஸ்.கோமதி, விளையாட்டு செயலாளராக ஏ.நந்தினி ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.÷