இணையதளம் மூலம் பழ விற்பனை

குன்னூர்,ஜூலை 30: அரசு பழப்பண்ணையில் காய்க்கத் துவங்கியுள்ள மருத்துவ குணமிக்க பழங்கள், இணையதளம் மூலம் விற்கப்படுகின்றன. ÷குன்னூர், பர்லியார் அரசு தோட்டக் கலைப் பண்ணையில், துரியன் என்கிற மருத்துவ குணம்
Published on
Updated on
1 min read

குன்னூர்,ஜூலை 30: அரசு பழப்பண்ணையில் காய்க்கத் துவங்கியுள்ள மருத்துவ குணமிக்க பழங்கள், இணையதளம் மூலம் விற்கப்படுகின்றன.

÷குன்னூர், பர்லியார் அரசு தோட்டக் கலைப் பண்ணையில், துரியன் என்கிற மருத்துவ குணம் உள்ள விற்பனை அதிகரித்து வருகிறது.

இதை அறிந்த பலரும் இணையதளம் மூலம் அதற்காகப் பதிவு செய்து வருகின்றனர்.

÷நீலகிரி மாவட்டத்தில் விளையும் பழங்களில், பல்வேறு மருத்துவ குணமிக்க பழங்கள் இருந்தாலும் துரியன் பழத்திற்கு என்று தனி இடம் உண்டு.

 நீண்ட காலமாக குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இப்பழத்தை உண்டால் குழந்தைப் பேறு கிடைப்பதாக கருத்து நிலவுவதால், இப்பழங்களின் விற்பனை தற்போது அதிகரித்துள்ளது.

÷இதுகுறித்து பழப் பண்ணை குத்தகைதாரர் ஜெ.சஜி ராமதாஸ் கூறியது: ஆண்டில்  மூன்று மாதங்களுக்கு மேலாகக் காய்க்கும் இப்பழங்களை சென்னை, திருப்பூர், பொள்ளாச்சி, சேலம், நாமக்கல், பெங்களூரு, கேரளா உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் வாங்குகின்றனர்.

ஒரு கிலோ பழம் ரூ. 350 வரை விற்கப்படுகிற்து.

  இதுவரை 600 பேர் முன்பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு படிப்படியாக தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. முன்பதிவு இல்லாமல் வருபவர்களுக்கும் பழங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.