கொடுமுடி, ஜூலை 30: ஆடி அமாவாசையை முன்னிட்டு கொடுமுடி காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
÷ஆடி அமாவாசை நாளில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதால் நன்மை பிறக்கும் என்பதால், கொடுமுடி காவிரி ஆற்றில் சனிக்கிழமை அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டனர்.
மாது பிதுர் தோஷ நிவர்த்தி பரிகாரம், முன்னோர்கள் செய்த பாவம், முன் ஜென்ம சாப தோஷம் உள்ளிட்ட தோஷ நிவர்த்தி பரிகாரங்கள் செய்த பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர். மேலும், மகுடேஸ்வரர், வீரநாராயணப் பெருமாள் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.
÷கோயிலில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டு வரிசையில் செல்லவும், பக்தர்களின் சிறப்புத் தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவிரி ஆற்றங்கரையில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் பக்தர்களின் பாதுகாப்புக்காக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குழுவினர் 108 ஆம்புலன்ஸ் வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர்.