கோபி, ஜூலை 30: கோபியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 தேர்வை 3211 பேர் எழுதினர்.
÷கோபி பிகேஆர் மகளிர் கலைக் கல்லூரி, கோபி கலைக் கல்லூரி, வைரவிழா மேல்நிலைப் பள்ளி, பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அமலா பள்ளி, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மொடச்சூர் சாரதா மேல்நிலைப் பள்ளி ஆகிய 7 பள்ளிகளில் 11 மையங்களில் 3211 பேர் தேர்வு எழுதினர். ÷கோபி கோட்டாட்சியர் (பொறுப்பு) நா.குணசேகரன், வட்டாட்சியர் வெ.முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் மையங்களைப் பார்வையிட்டனர்.
சாலை விபத்தில் ஒருவர் சாவு
கோபி, ஜூலை 30: கவுந்தப்பாடி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
÷ஈரோடு ஜகநாதபுரம் காலனியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (22). ஈரோட்டில் இருந்து கோபிக்கு மோட்டார் சைக்கிளில் வெள்ளிக்கிழமை வந்தார்.
சுப்பிரமணி என்பவர் மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்து இருந்தார்.
÷கவுந்தப்பாடி அருகே முத்துக்கவுண்டன்பிரிவு ரோடு அருகே வரும்போது கோபியில் இருந்து ஈரோடு சென்ற தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் ராஜேஷ்குமார் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
÷சுப்பிரமணி படுகாயம் அடைந்தார். கவுந்தப்பாடி போலீஸôர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.