ஈரோடு, ஜூலை 30: அதிமுக அரசைக் கண்டித்து ஈரோட்டில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக மாவட்டச் செயலர் என்.கே.கே.பி. ராஜா தெரிவித்தார்.
÷இதுகுறித்து அவர் தெரிவித்தது: அதிமுக அரசு அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு, திமுகவினர் மீது நில அபகரிப்பு என்ற பெயரில் வழக்குகளைப் போடுகிறது.
இதனைக் கண்டித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோயில் அருகே நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
எனவே, தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட அனைவரும் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும் என்றார்.