குன்னூர், ஜூலை 30: குன்னூர் அருகில் உள்ள எல்லநள்ளிப் பகுதியில் வெள்ளிக்கிழமை மரம் விழுந்ததில் மினி பஸ் பலத்த சேதமடைந்தது.(படம்)
÷குன்னூர் அருகே எல்லநள்ளிப் பகுதியில் பெட்ரோல் பங்க் உள்ளது. இப்பகுதியில் இரவு காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. அப்போது எதிர்பாராவிதமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினிபஸ் மீது பெரிய மரம் விழுந்தது.
÷இதனால் அந்த மினி பஸ் பலத்த சேதமடைந்தது. தகவல் அறிந்த உதகை தீயணைப்பு துறை முதன்மை அதிகாரி சீதாராம் தலைமையில் தீயணைப்புத்துறையினர் மரத்தை அப்புறப்படுத்தினர்.