வெள்ளக்கோவில், ஜூலை 30: வெள்ளக்கோவில், பூலாம்பரப்பு ஸ்ரீ அன்னமார் சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை படுகளம் நடைபெற்றது.
முன்னதாக திரளான காவடிக் குழுவினர் வீரப்பூர் புறப்பட்டுச் சென்று, அங்குள்ள கூவிண்டாம் பள்ளத்தில் தீர்த்தம் எடுத்து வந்து சுவாமிக்கு வழிபாடு நடத்தினர். உட்கோயிலான பெரிய காண்டியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சுவாமி கிளி வேட்டை புறப்பாடு, பஞ்சு மெத்தைக்குச் செல்லுதல், படுகளம் ஆகியவை நடைபெற்றன.
மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நல்லூர்பாளையம், அனுமந்தபுரம், பூலாம்பரப்பு கிராம மக்கள் செய்திருந்தனர்.