Enable Javscript for better performance
மாநகராட்சி வார்டுகளில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க கோரி கடையடைப்பு- Dinamani

சுடச்சுட

    

    மாநகராட்சி வார்டுகளில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க கோரி கடையடைப்பு

    Published on : 20th September 2012 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை, செப்.21: கோவை மாநகராட்சியில் உள்ள 87, 95வது வார்டுகளில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்காததைக் கண்டித்து குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

    ÷கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 72 வார்டுகள், மறுசீரமைப்பில் 100 வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. இதில் 87, 95 ஆகிய இரு வார்டுகள் ரிசர்வ் தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு வார்டுகளுக்கு உட்பட்ட அதிகமாக முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியை பெண்கள் வார்டு என்றும், தாழ்த்தப்பட்டவர்களுக்கான வார்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ÷இதற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு முஸ்லிம்

    முன்னேற்றக் கழகம் குறிச்சி நகரம் சார்பில் கடையடைப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும், தர்ணா போராட்டமும் நடத்தப்பட்டது. சில  தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் ஆட்டோக்களை ஓட்டவில்லை.

     இது தொடர்பாக, குறிச்சி நகர துணை செயலாளர் அக்சயா நிஷார் கூறியது:   மாநகராட்சி தேர்தலில் முஸ்லிம்கள் அரசியல் பிரதிநிதித்துவத்தை பறிப்பது போல உள்ளது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் வார்டுகளை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு கொடுப்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால், எங்களின் உரிமைகளை பறித்து அந்த மக்களுக்கு கொடுப்பதில் நியாயம் இல்லை. இதற்கு அரசு அதிகாரிகள் தான் காரணம். இதற்கு சரியான தீர்வு காணவில்லையெனில் அடுத்தக் கட்ட போராட்டம் தொடரும்.

     மாநகராட்சியின் 87, 95 ஆகிய இரு வார்டுகளை பொது தொகுதியாக அறிவிக்க வேண்டும்.

     அடுத்ததாக வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் திருப்பி அளிக்க உள்ளோம். இதற்கு மாவட்ட ஆட்சியர் தகுந்த முறையில் தீர்வு காண வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai