கூடலூர், பிப். 10: மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இலவச தொழில் பயிற்சி வெள்ளிக்கிழமை துவங்கியது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 40 ஆண் மற்றும் பெண்களுக்கு இலவச ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் பயிற்சியை நடத்த கூடலூரிலுள்ள நீலகிரி இன்ஸ்டிட்யூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் பள்ளிக்கு தமிழக அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.
பயிற்சி துவக்க விழாவிற்கு நீலகிரி மாவட்ட மகளிர் மேம்பாட்டுத் திட்ட உதவி அலுவலர் ஹானாடிக்சன் தலைமை வகித்துத் துவக்கி வைத்தார். பள்ளித் தாளாளர் பி.சின்னசாமி, முதல்வர் ரமேஷ், ஊராட்சி ஒன்றிய மேலாளர் ஸ்ரீதரன், நிர்வாக அலுவலர் சி.பார்த்திபன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.