குன்னூர், பிப். 10: குன்னூர் உதகை சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் தொங்கிக் கொண்டிருக்கும் மரங்களை வெட்டி அகற்றும் பணி (படம்) வெள்ளிக்கிழமை துவங்கியது.
இச்சாலையில் உள்ள பெரும்பாலான வயது முதிர்ந்த மரங்கள் விபத்தை உருவாக்கும் வகையில் தொங்கிக் கொண்டுள்ளன. மழைக்காலங்களில் சாலைகளின் இம்மரங்கள் குறுக்கே விழுந்து விபத்தினை ஏற்படுத்துகின்றன. இதனால் வாகனப் போக்குவரத்தும் பாதிக்ப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு சாலைகளின் ஓரத்தில் ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்ருக்கும் மரங்களை வட்டாரப் போக்குவரத்துக் கழகம், தீயணைப்புத் துறையினர், இணைந்து வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.