யானை தந்தம் கடத்திய 4 பேர் கைது

சத்தியமங்கலம், பிப். 10: கடம்பூர் வனத்தில் யானை தந்தங்களை கடத்தியதாக 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். ÷சத்தியமங்கலம் வனக்கோட்டம் கடம்பூர் வனப்பகுதி விளாங்கோம்பை காட்டில் மர்மகும்பல் பதுங்கியிருப்பத
Published on
Updated on
1 min read

சத்தியமங்கலம், பிப். 10: கடம்பூர் வனத்தில் யானை தந்தங்களை கடத்தியதாக 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

÷சத்தியமங்கலம் வனக்கோட்டம் கடம்பூர் வனப்பகுதி விளாங்கோம்பை காட்டில் மர்மகும்பல் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அதிரடிப்படையினர் மற்றும் சத்தியமங்கலம் வனச்சரக அலுவலர் நாகசுந்தரம் தலைமையிலான வனப்பாதுகாப்பு படையினர் அங்கு சென்றனர்.

÷வனச்சாலையில் சென்று கொண்டிருந்த காரை நிறுத்திச் சோதனையிட்டபோது, ஒரு சாக்குப் பையில் 2 யானை தந்தங்கள் இருந்தது தெரியவந்தது.

÷இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த செந்தில்குமார் (35), மோகன்ராஜ் (41), பாலு(35) மற்றும் கேரளாவைச் சேர்ந்த பீட்டர் (35) ஆகியோரை கைது செய்து தந்தங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com