டாஸ்மாக் நிறுவனத்தில் இருந்து திடீர் பணி நீக்கம்: முன்னாள் ராணுவத்தினர் கோரிக்கை

டாஸ்மாக் டெக்ஸ்கோ நிறுவனத்தில் இளநிலை உதவியாளராகப் பணியில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டாஸ்மாக் நிறுவனத்தில் இருந்து திடீர் பணி நீக்கம்: முன்னாள் ராணுவத்தினர் கோரிக்கை


டாஸ்மாக் டெக்ஸ்கோ நிறுவனத்தில் இளநிலை உதவியாளராகப் பணியில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை டாஸ்மாக் மண்டல அலுவலகம் பீளமேடு பகுதியில் உள்ளது. இங்கு பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரர்கள் டாஸ்மாக் டெக்ஸ்கோ இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், தீடீரென எந்தவித முன்னறிவிப்புமின்றி தமிழகம் முழுவதும் உள்ள இளநிலை உதவியாளர்களைப் பணி நீக்கம் செய்து புதிதாக ஆட்களைத் தேர்வு செய்து பணி நியமனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், 50-க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் இன்று (புதன்கிழமை) கோவை மாவட்ட டாஸ்மாக் நிறுவன முதுநிலை மண்டல மேலாளரைச் சந்தித்து மனு அளித்தனர்.

இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் ராணுவத்தினர்,

"கடந்த 2004ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் முன்னாள் ராணுவத்தினர் இளநிலை உதவியாளர்களாகப் பணியமர்த்தப்பட்டனர். இந்நிலையில், டாஸ்மாக் நிறுவனத்தில் எந்தவித முன்னறிவிப்புமின்றி முன்னாள் ராணுவத்தினரைப் பணி நீக்கம் செய்துள்ளனர். இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படையும் நிலைக்குத் தள்ளப்பட்டது. 

இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. அதன்பின் ஒருமாத காலம் பணி நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

எனவே ஆட்சியாளர்கள் மற்றும் அலுவலர்கள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து இதுதொடர்பான ஆணையை ரத்து செய்ய வேண்டும். நாங்கள் பணியில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் முன்னாள் ராணுவத்தினர் அனைவரும் குடும்பத்துடன் சாலையில் இறங்கி போராடும் நிலை வந்துவிடும்" என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com