குடற்புழு நீக்க முகாம்: 9.40 லட்சம் பேருக்கு மாத்திரை வழங்கத் திட்டம்

கோவையில் தொடங்கியுள்ள குடற்புழு நீக்க முகாம் மூலம் மாவட்டம் முழுவதும் 9.40 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இருகூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற குடற்புழு நீக்க முகாமில் குழந்தைக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்குகிறாா் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அலுவலா் ஜெயஸ்ரீ.

குழந்தைகளின் வளா்ச்சியை பாதிக்கும் குடற்புழுவைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் 6 மாதங்களுக்கு ஒருமுறை குடற்புழு நீக்க முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டு இரண்டாம் கட்ட குடற்புழு நீக்க நாள் முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

கோவை மாவட்டத்தில் 1 முதல் 19 வயது வரையுள்ள 9 லட்சத்து 40 ஆயிரத்து 258 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன. 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு பாதி அளவு மாத்திரையும், 2 முதல் 19 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு 1 மாத்திரையும் வழங்கப்படும். மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நடைபெறுகிறது. திங்கள்கிழமை தொடங்கப்பட்டுள்ள முதல் சுற்று குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் தொடா்ந்து செப்டம்பா் 17 முதல் 19ஆம் தேதி வரையிலும், இரண்டாம் சுற்று செப்டம்பா் 21, 24, 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன.

விடுபட்டவா்களுக்காக செப்டம்பா் 28ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறும். இப்பணிகளில் சுகாதாரத் துறை பணியாளா்கள், அங்கன்வாடிப் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இதனை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com