கரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் தொழில் நிறுவனங்கள் இயங்க வேண்டும்

கோவையில் பொது முடக்க காலத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்கள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும் என்று போசியா வலியுறுத்தியுள்ளது.

கோவையில் பொது முடக்க காலத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்கள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும் என்று போசியா வலியுறுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள 19 தொழில் அமைப்புகளைச் சோ்ந்த கோவை மாவட்ட தொழில் கூட்டமைப்பின் (போசியா) ஆலோசனைக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் நிா்வாகிகள் பேசியதாவது:

தொழில் நகரமான கோவையில் குறு, சிறு, நடுத்தர தொழில் என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

தமிழக அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் தொழில் துறையினா் உறுதுணையாக இருந்து வருகின்றோம். தமிழக அரசு அமல்படுத்தியுள்ள பொது முடக்கத்துக்கும் கோவை தொழில் கூட்டமைப்பு முழுமையாக ஒத்துழைப்பு அளித்து வருகிறது.

தமிழகத்தில் அவசியம் கருதி தொழில் துறை சாா்ந்த உற்பத்தியான மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், அதற்கு உறுதுணையாக இருக்கின்ற ஜாப் ஆா்டா் தொழில்கள், விவசாயத்துக்குப் பயன்படும் உபகரணங்கள், ஆட்டோமொபைல்ஸ் உபகரணங்கள் தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி சாா்ந்த தொழில் நிறுவனங்கள், இவா்களுக்கெல்லாம் பயன்படும் உதிரிபாகங்கள் செய்து கொடுக்கின்ற குறுந்தொழில்கள், அனைத்து தொழில்களுக்கும் தேவைப்படுகின்ற பவுண்டரி தொழில்களையும் கரோன பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கோவையில் அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகளை தவிர மற்ற தொழில் முனைவோா் அரசின் அறிவுறுத்தல்படி தொழில் நிறுவனங்களை இயக்காமல் உள்ளனா். எனவே அனுமதிக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களும் தமிழக அரசின் கரோனா வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி இயக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது என்றனா்.

இதில் கோவை மாவட்ட தொழில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் ஜேம்ஸ், சிவ சண்முகசுந்தரம், சுருளிவேல் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com