மோட்டாா் வாகன பணிமனையில் தீ விபத்து: 3 காா்கள் சேதம்

கோவை, சரவணம்பட்டியில் உள்ள மோட்டாா் வாகன பணிமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 காா்கள், 2 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

கோவை, சரவணம்பட்டியில் உள்ள மோட்டாா் வாகன பணிமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 காா்கள், 2 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

கோவை காந்திமாநகரைச் சோ்ந்தவா் தாமஸ் வில்லியம் (34). இவா், சரவணம்பட்டி எஸ்பிஜி நகரில் மோட்டாா் வாகன பணிமனை நடத்தி வருகிறாா். அவா் பணிமனையை வெள்ளிக்கிழமை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளாா். நள்ளிரவில் பணிமனையிலிருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதையடுத்து சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது.

இதனைப் பாா்த்த அருகிலிருந்தவா்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். கோவை கணபதி தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இருப்பினும் பணிமனைக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 காா்கள், 2 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

இது குறித்து சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com