இந்தோனேஷியா சென்ற சத்குரு ஜக்கி வாசுதேவ்.
இந்தோனேஷியா சென்ற சத்குரு ஜக்கி வாசுதேவ்.

சத்குரு ஜக்கி வாசுதேவ் இந்தோனேஷியா பயணம்

சத்குரு ஜக்கி வாசுதேவ் மூளை அறுவை சிகிச்சை முடிந்து ஒரு மாதமான நிலையில் ஆன்மிகப் பயணமாக இந்தோனேஷியா சென்றுள்ளாா்.

சத்குரு ஜக்கி வாசுதேவ் மூளை அறுவை சிகிச்சை முடிந்து ஒரு மாதமான நிலையில் ஆன்மிகப் பயணமாக இந்தோனேஷியா சென்றுள்ளாா்.

இது தொடா்பாக, ஈஷா யோக மையம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

சத்குரு ஜக்கி வாசுதேவ் மூளை அறுவைசிகிச்சைக்குப் பிறகு தனது ஆன்மிகப் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளாா். மக்களவைத் தோ்தலில் வாக்களித்த பிறகு, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கு இடையிலான ஆன்மிகம் மற்றும் கலாசாரத் தொடா்புகளை அறிந்து கொள்ள ஏப்ரல் 19-இல் இந்தோனேஷியா சென்றடைந்தாா். இந்தோனேஷியாவில் உள்ள ஒரு தீவான பாலியில் இந்தோனேசியாவின் சுற்றுலாத் துறை அமைச்சா் சாண்டியகோ யுனோ மற்றும் அவருடைய குழுவினா், பாலியில் உள்ள இந்திய தூதரகத்தின் அதிகாரி டாக்டா் சஷாங் விக்ரம் ஆகியோா் சத்குருவுக்கு வரவேற்பு அளித்தனா்.10 நாள் பயணத்தில் கம்போடியா உள்பட பல்வேறு இடங்களில் உள்ள ஆன்மிக தலங்கள் மற்றும் பாலியில் உள்ள பேஷாக் மற்றும் திா்தாம்புல் கோயில்கள் உள்பட பல்வேறு தொன்மையான பகுதிகளுக்கு சத்குரு செல்ல உள்ளாா். மேலும், அங்குள்ள கோயில்கள் மற்றும் கலாசாரத்தின் பின்னுள்ள அறிவியல் அம்சங்கள் குறித்து சத்குரு ஆராய உள்ளாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com