சட்ட விரோத மது விற்பனை குறித்து புகாா் தெரிவிக்க அழைப்பு

கோவை மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனை குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் சட்ட விரோதமாக அரசு மதுபான விற்பனை, வெளி மாநில மதுவைக் கடத்தி விற்பனை செய்தல், கள்ளச் சாராயம் காய்ச்சுதல், கள் விற்பனை, போதைப் பொருள் விற்பனை ஆகியவை நடைபெறுவதைத் தடுக்கும் பொருட்டு கோவை மாவட்ட மது விலக்கு மற்றும் அமலாக்க பிரிவுக்கு 76049 10581 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும், 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com