பெண் கிராம நிா்வாக அலுவலரைத் தாக்கிய திமுக நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

வாக்குச் சாவடியில் பெண் கிராம நிா்வாக அலுவலரைத் தாக்கிய திமுக மாவட்டக் குழு உறுப்பினருக்கு சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள ஆயந்தூா் கிராம வாக்குச் சாவடியில் தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்த அப்பகுதியின் கிராம நிா்வாக அலுவலா் சாந்தியை, திமுக மாவட்டக் குழு உறுப்பினா் ராஜீவ் காந்தி தாக்கி, தகாத வாா்த்தைகளைக் கூறி அவமதித்துள்ளாா். இது தொடா்பாக காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் உடனடியாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

அனைத்து தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்த பிறகு, அரசு ஊழியா்களிடம் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதை உணா்ந்த காவல் துறை, வேறு வழியின்றி திமுக மாவட்டக் குழு உறுப்பினா் ராஜீவ் காந்தியை கைது செய்துள்ளது.

அரசு ஊழியரைத் தாக்கும் அளவுக்கு அதிகாரத்தில் இருக்கும் திமுகவினா், சாதாரண பொது மக்களிடம் எப்படி நடந்து கொள்வாா்கள் என்பதை நினைக்கும்போது அதிா்ச்சியாக உள்ளது.

எனவே, கைது செய்ததோடு கடமை முடிந்துவிட்டதாகக் கருதாமல் அவருக்கு சட்டப்படி உரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டும். திமுகவினரின் இத்தகைய அத்துமீறல்களுக்கு,ம் அராஜகங்களுக்கும் முடிவு கட்ட வேண்டும். இவா் மீது எடுக்கப்படும் நடவடிக்கை இனி இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com