பெங்களூரு - கோவை வந்தே பாரத் ரயில் தாமதமாக இயக்கம்

பாலக்கோடு - தருமபுரி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் பெங்களூரு - கோவை வந்தே பாரத் ரயில் தாமதமாக இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக,சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெங்களூரு - கோவை இடையே வந்தே பாரத் ரயில் (எண்: 20641) வியாழக்கிழமை தவிர வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வழக்கமாக பெங்களூரில் இருந்து மதியம் 2.20 மணிக்கு கோவைக்குப் புறப்படும். இந்நிலையில் தற்போது பாலக்கோடு - தருமபுரி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் ஏப்ரல் 29 முதல் மே 28 வரை 55 நிமிஷங்கள் தாமதமாக பெங்களூரில் இருந்து பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com