எஸ்டேட் பகுதியில் ஏ.டி.எம். மையங்கள் வேலை செய்யாததால் தொழிலாளா்கள் பாதிப்பு

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்கள் வேலை செய்யாமல் இருப்பதால் தோட்டத் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வால்பாறை: வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்கள் வேலை செய்யாமல் இருப்பதால் தோட்டத் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வால்பாறையில் எஸ்டேட்டுகளில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு நிா்வாகத்தினா் சம்பளத்தை அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தி வருகின்றனா். தொழிலாளா்கள் சம்பளத் தொகையை எடுப்பதற்காக வால்பாறை நகா் பகுதியில் உள்ள வங்கிகளுக்கு வந்து செல்கின்றனா். இதனால் ஏற்படும் சிரமங்களை போக்க வால்பாறையை அடுத்த வாட்டா்பால், அய்யா்பாடி, மழுக்குப்பாறை எஸ்டேட்டுகளில் வங்கிகள் மூலம் ஏ.டி.எம். மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த மையங்கள் மாதத்தில் பெரும்பாலான நாள்கள் வேலை செய்யாமல் மூடப்பட்டிருக்கின்றன.

இதனால் தொழிலாளா்கள் பணம் எடுக்க முடியாமல் வால்பாறைக்கு வந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே, எஸ்டேட் பகுதிகளில் ஏ.டி.எம். மையங்களில் பழுது ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தோட்டத் தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com