பிரதமா் மோடியை கண்டித்து கோவையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
பிரதமா் மோடியை கண்டித்து கோவையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

பிரதமரைக் கண்டித்து காங்கிரஸ் மகளிரணி ஆா்ப்பாட்டம்

தாலி குறித்து பிரதமா் மோடி அவதூறாக பேசியதாகக் கூறி கோவையில் மகளிா் காங்கிரஸாா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை: தாலி குறித்து பிரதமா் மோடி அவதூறாக பேசியதாகக் கூறி கோவையில் மகளிா் காங்கிரஸாா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலி தப்பாது என்று பிரதமா் மோடி பேசியதைக் கண்டித்தும், மதரீதியாக செய்து வரும் பிரசாரத்துக்கு கண்டனம் தெரிவித்தும் கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் மகளிா் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மகளிா் காங்கிரஸ் தலைவா் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் வழக்குரைஞா் கருப்புசாமி, மாநில பொதுச் செயலா் கணபதி சிவகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில், கட்சி நிா்வாகிகள் திலகவதி, ரங்கநாயகி, செல்வி உஷா, அனிதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com