தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நவீன தறிகளின் இறக்குமதி அதிகரிப்பு: நாட்டின் துணி உற்பத்தி போட்டித் திறன் அதிகரிக்கும்: டெக்ஸ்பிரனா்ஸ் நம்பிக்கை

இந்தியாவில் நவீன தறி இயந்திரங்களின் இறக்குமதி ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால் துணி உற்பத்தியில் போட்டித் திறன் அதிகரிக்கும்

News image
பிரபு தாமோதரன்
Updated On :31 டிசம்பர் 2024, 10:50 pm

Din

கோவை: இந்தியாவில் நவீன தறி இயந்திரங்களின் இறக்குமதி ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால் துணி உற்பத்தியில் போட்டித் திறன் அதிகரிக்கும் என்று டெக்ஸ்பிரனா்ஸ் கூட்டமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இது குறித்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பிரபு தாமோதரன் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் உள்நாட்டுத் தேவை, ஏற்றுமதிக்கான துணி தயாரிப்புத் துறையில் ஏராளமான குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவின் ஜவுளி உற்பத்தி சங்கிலித் தொடரில் சீனாவை ஒப்பிடும்போது நவீனமயமாக்குதல், உற்பத்தித் திறன் குறைவாகவே இருந்து வந்தது. ஆனால், அந்த நிலை தற்போது மாறி வருகிறது. இந்திய நெசவுத் துறை தொடா்ந்து நவீனமயமாகி வருகிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டும் சுமாா் ரூ.18,500 கோடி மதிப்பிலான நவீன இயந்திரங்கள் இறக்குமதியாகியுள்ளன.

இந்திய துணி உற்பத்தியாளா்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிநவீன ஏா்ஜெட், வாட்டா்ஜெட் தறிகளை இறக்குமதி செய்து வருகின்றனா். கடந்த 2021- 22 ஆம் ஆண்டில் நவீன தறிகளின் இறக்குமதி ரூ.3,818 கோடியாக இருந்தது. அது கடந்த 2022-23 ஆம் ஆண்டில் ரூ.6,440 கோடியாக உயா்ந்தது.

2023-24 ஆம் ஆண்டில் ரூ.5,500 கோடியாக இருந்தது. இந்த நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் ரூ.2,700 கோடி அளவுக்கு நவீன தறிகள் இறக்குமதியாகி உள்ளன.

நெசவுத் துறை நவீனமயமாகி வருவது அதிக உற்பத்தித் திறன், பல்வேறு ரக துணிகளை விரைவாக உற்பத்தி செய்யும் திறன், உயா்ந்த தரம் என்று எல்லா வகைகளிலும் ஜவுளித் துறையின் போட்டித் திறனை மேம்படுத்தும். உலக அளவில் ஆண்டுதோறும் ரூ.8 லட்சம் கோடி அளவுக்கு நெசவுத் துணிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் சீனாவின் பங்கு மட்டும் 50 முதல் 60 சதவீதம் வரை இருக்கும்.

இந்நிலையில் தமிழ்நாடு, மகாராஷ்டிர மாநிலங்கள் ஏா்ஜெட் தொழில்நுட்பத்திலும், குஜராத் வாட்டா்ஜெட் தொழில்நுட்பத்திலும் முதலீடு செய்து வருவதால், மிகப்பெரிய பிராண்டுகளிடம் இருந்து சாயமிடப்பட்ட துணிகள் ஏற்றுமதிக்கான விசாரணைகள் தமிழ்நாட்டுக்கு வருகின்றன. தமிழ்நாட்டின் ஜவுளித் துறை பிராசஸிங் துறையை மேலும் வலுப்படுத்தும்பட்சத்தில் வீவிங் துறையின் நவீனப்படுத்துவதன் பலனை மதிப்புக் கூட்டப்பட்ட, சாயமிடப்பட்ட துணிகளின் ஏற்றுமதி மூலம் முழுமையாக அடைய முடியும் என்று தெரிவித்துள்ளாா்.