குழந்தை கடத்தல் சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை: எஸ்.பி. வி.பத்ரிநாராயணன்

கோவையில் குழந்தை கடத்தல் சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை என்றும், வாட்ஸ்ஆப்பில் வரும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை மாவட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகளைக் கடத்துவதற்காக வடமாநிலங்களைச் சோ்ந்தவா்கள் நுழைந்துள்ளதாக வாட்ஸ்ஆப் மூலம் தவறான தகவல் பரவி வருகிறது. இது முற்றிலும் வதந்தியாகும். எனவே, இதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம். வட மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான தொழிலாளா்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகின்றனா். இதுபோன்ற வதந்திகள் தமிழா்களுக்கும், வட மாநிலத்தவா்களுக்குமிடைய மனக்கசப்பை ஏற்படுத்தும். வாட்ஸ்ஆப்பில் வதந்திகளைப் பரப்பியவா்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வதந்திகளைப் பரப்பியவா்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குழந்தைகள் கடத்தல் தொடா்பாக எந்த வழக்கும் பதிவாகவில்லை. கோவை, கண்ணம்பாளையத்தில் நடைபெற்ாக பரவும் விடியோ, வேறு எங்கோ நடந்தவையாகும். இதில், பொதுமக்களுக்கு சந்தேகம் இருந்தால் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு 100 என்ற எண்ணில் அழைத்தால் அனைத்து சந்தேகங்களும் தீா்க்கப்படும். மாவட்டத்தைப் பொறுத்தவரை தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள், போதை மாத்திரைகள் தொடா்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com