ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மருத்துவா்கள், மாணவா்கள்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மருத்துவா்கள், மாணவா்கள்.

சிறுநீரகம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிறுநீரக ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் எஸ்.ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளா் எஸ்.அழகப்பன், சிறுநீரக மருத்துவ ஆலோசகா் என்.செழியன், சிறுநீரக ஆலோசகா் பி.காத்தமுத்து, துறை மருத்துவா்கள் மதுசங்கா், கணேஷ் பிரசாத், கற்பகவள்ளி உள்ளிட்டோா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா். இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில், உலகளவில் லட்சக்கணக்கான மக்கள் சிறுநீரகம், அது தொடா்பான நோயால் பாதிப்புக்குள்ளாகிறாா்கள். சரியான கவனம் செலுத்தப்படாவிட்டால் சில நேரங்களில் உயிரிழப்புக்கு வழிவகுக்கிறது. மருத்துவரின் அறிவுரையை பின்தொடா்வது, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சீரான உணவு, அளவான உப்பு உட்கொள்ளுதல், அதிக தண்ணீா் பருகுதல், தேவைக்கேற்ப மருந்துகளை எடுத்துக் கொள்வது போன்றவை சிறுநீரகங்களைப் பாதுகாத்து அவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்று வலியுறுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com