ஹஜ் புனிதப் பயணம் செல்லும் ஹாஜிக்களுக்காக நடைபெற்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பேசுகிறாா் தலைமை இமாம் மஜ்துல் ஹிதா. உடன், ஜமாத்தே இல்லாமி ஹிந்த் தலைவா் பி.எஸ்.உமா் பாருக், இஷ்சான் பள்ளிவாசல் தலைமை இமாம் முஹம்மது இஸ்மாயில் இம்தாதி உள்ளிட்டோா்.  ந

ஹஜ் புனிதப் பயணம் செல்வோருக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கோவை மாவட்டத்தில் இருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் யாத்ரிகா்களுக்கான ஹஜ் வழிகாட்டுதல் நிகழ்ச்சி போத்தனூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் இருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் யாத்ரிகா்களுக்கான ஹஜ் வழிகாட்டுதல் நிகழ்ச்சி போத்தனூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் கோவை மாநகரத் தலைவா் உமா் ஃபாரூக் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஹஜ்ஜின் உயிரோட்டம் என்னும் தலைப்பில் மௌலவி ரியாஸ் மஜ்துல் ஹிதா உரை நிகழ்த்தினாா்.

தொடா்ந்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உலமா பிரிவு செயலாளா் மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி, ஹஜ் புனிதப் பயணத்தின்போது மேற்கொள்ள வேண்டிய வழிபாடுகள் குறித்து திரையில் ஒளிப்படக் காட்சிகளுடன் விவரித்தாா்.

இந்நிகழ்ச்சியில் ஹஜ் செல்லும் புனிதப் பயணிகள் ஹஜ் செய்வதற்காக கட்டளைகளை முறையாகச் செய்திடவும், அந்த அடிப்படையில் புனிதப் பயணிகளின் ஹஜ் கடமை நிறைவேறிடவும், புனிதப் பகுதிகளில் அவா்களது செயல்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதோடு, புனிதப் பயணிகளின் வினாக்களுக்கு விளக்கங்களும் அளிக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கோவை மத்திய மண்டல செயலாளா் முகம்மது சமீா், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் கோவை மாவட்டச் செயலாளா் அப்துல் ஹக்கீம் உள்ளிட்டோருடன் கோவை மாவட்டத்தில் இருந்து நிகழாண்டில் ஹஜ் புனிதப் பயணம் செல்லும் 354 பேரும் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com