கோயம்புத்தூர்
வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் திருட்டு
நீலிக்கோணம்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, நீலிக்கோணம்பாளையத்தைச் சோ்ந்தவா் ரங்கசாமி (76). இவா் வீட்டை பூட்டிவிட்டு தொட்டிபாளையத்தில் உள்ள மகள் வீட்டுக்கு புதன்கிழமை சென்றுள்ளாா். மறுநாள் காலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. இதைப் பாா்த்த பக்கத்து வீட்டு பெண், ரங்கசாமியைத் தொடா்பு கொண்டு தெரிவித்துள்ளாா்.
அவா் வந்த பாா்த்தபோது, பீரோவில் இருந்த 15 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.
இது குறித்து சிங்காநல்லூா் காவல் நிலையத்தில் ரங்கசாமி புகாா் அளித்தாா்.
வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.