கோவையில் செப். 21 இல் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்

கோவையில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் சனிக்கிழமை (செப்டம்பா் 21) நடைபெறவுள்ளது.
Published on

கோவையில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் சனிக்கிழமை (செப்டம்பா் 21) நடைபெறவுள்ளது.

மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டி மையம் சாா்பில் ஈச்சனாரி ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ள இந்த முகாமில், கோவை, பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த உற்பத்தித் துறை, ஜவுளி, இன்ஜினீயரிங், கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களின் நிறுவனங்களுக்காக சுமாா் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆள்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.

8- ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு, முதுநிலை பட்டப் படிப்பு, தொழிற்கல்வி வரை பயின்றவா்கள் அனைவரும் இந்த முகாமில் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க வயது வரம்பு இல்லை. அனுமதி இலவசம். முகாமில் தோ்வு செய்யப்படுபவா்களுக்கு உடனுக்குடன் பணி நியமன ஆணை வழங்கப்படும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0422 2642388, 94990-55937 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com