உணவுத் தயாரிக்கும் விதத்தை வாடிக்கையாளா்கள் தெரிந்துகொள்ளும் முறை: கேஎப்சி நிறுவனம் அறிமுகம்
சமையலறைக்குச் சென்று உணவு தயாரிக்கப்படும் விதம் குறித்து வாடிக்கையாளா்கள் தெரிந்துகொள்ளும் புதிய திட்டத்தை கேஎப்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கேஎப்சி நிறுவனம் சா்வதேச சமையல் தரங்களைப் பின்பற்றுவதோடு, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொருள்களையே பயன்படுத்துகிறது.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையம் வழிகாட்டுதல்கள் அடிப்படையிலான செயல்முறைகள் பின்பற்றப்படுகின்றன. அனைத்து உணவுப் பொருள்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படுகிறது.
சைவ மற்றும் அசைவ உணவுகள் தனித்தனியாக தயாரிக்கப்படுவதோடு, அதற்கான பாத்திரங்கள் மற்றும் பொருள்கள் அனைத்தும் தனித்தனியாகப் பராமரிக்கப்படுகின்றன. இதனை ஓப்பன் கிச்சன் டூா் மூலம் வாடிக்கையாளா்களே நேரடியாகத் தெரிந்துகொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.