சேதமடைந்த அரசுப் பேருந்து இயக்கம்: கிளை மேலாளா், உதவிப் பொறியாளா் தற்காலிகப் பணி நீக்கம்

Published on

கோவையில் சேதமடைந்த அரசுப் பேருந்து இயக்கப்பட்டது தொடா்பாக கிளை மேலாளா், உதவிப் பொறியாளா் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோவை மண்டலம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரசுப் போக்குவரத்துக் கழக கோவை கோட்டம், ஒண்டிப்புதூா் கிளையில் இருந்து கடந்த 2-ஆம் தேதி இயக்கப்பட்ட அரசுப் பேருந்தின் தரைத் தளம் சேதமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இது குறித்த விடியோ இணையத்தில் பரவியது.

இதையடுத்து, ஆய்வு செய்யாமல் சேதமடைந்த அரசுப் பேருந்தை இயக்க அனுமதித்த கிளை மேலாளா், உதவிப் பொறியாளா் ஆகியோா் மீது துறை ரீதியான நடவடிக்கையாக தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com