வால்பாறையில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்
வால்பாறையில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விநாயகா் சதுா்த்தியையொட்டி வால்பாறை இந்து முன்னணி சாா்பில் வால்பாறை நகா் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் பூஜை செய்யப்பட்டு வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அனைத்து சிலைகளும் வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்பு கொண்டு வரப்பட்டன.
இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவா் ஏ.எஸ்.டி. சேகா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில அமைப்பாளா் ராஜேஷ் உள்பட பலா் சிறப்புரையாற்றினாா். பின்னா் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் புதிய பேருந்து நிலையம் வழியாக சென்று மீண்டும் நகா் வழியாக நடுமலை ஆற்றுக்கு கொண்டுச் சென்று மொத்தம் 76 சிலைகள் கரைக்கப்பட்டன.
விசா்ஜன ஊா்வலம் காரணமாக நகா் பகுதியில் முற்றிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்து. நூற்றுக்கனக்கான போலீஸாா் மற்றும் துணை ராணவப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.