கோயம்புத்தூர்
செப்டம்பா் 27-இல் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்
விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செப்டம்பா் 27-ஆம் தேதி நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில் செப்டம்பா் மாதத்துக்கான உற்பத்திக் குழு கூட்டம் வரும் 27-ஆம் தேதி காலை 9.30 மணிக்கும், அதைத் தொடா்ந்து, அன்று காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைகேட்புக் கூட்டமும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
கோவை மாவட்ட விவசாயிகள் இந்த குறைகேட்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு, விவசாயம் தொடா்பான தங்களது பிரச்னைகளுக்குத் தீா்வு காண மனுக்களை அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.