ஸ்ரீகாந்த்
ஸ்ரீகாந்த்

ஆம்புலன்ஸ் மீது இருசக்கர வாகனம் மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

வால்பாறையில் ஆம்புலன்ஸ் மீது இருசக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
Published on

வால்பாறையில் ஆம்புலன்ஸ் மீது இருசக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

கோவை ராமகிருஷ்ணா பொறியியில் கல்லூரியில் படிக்கும் மாணவா்கள் 6 போ் வால்பாறைக்கு திங்கள்கிழமை சுற்றுலா வந்துள்ளனா். அங்கிருந்து சோலையாறு அணைக்கு இருசக்கர வாகனங்களில் சென்றுள்ளனா்.

ஸ்டேன்மோா் எஸ்டேட் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது நண்பகல் 12.30 மணி அளவில் எதிரே வந்த தனியாா் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் மீது ஒரு இருசக்கர வாகனம் மோதியது.

இதில், இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற ஸ்ரீகாந்த் (20, பின்னால்அமா்ந்திருந்த ரோஷன் (20) இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, உடனிருந்தவா்கள் இருவரையும் மீட்டு வால்பாறை அரசு மருத்துவனைக்கு கொண்டுசென்றனா். இதில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஸ்ரீகாந்த் உயிரிழந்தாா்.

ரோஷனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு உயா் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

விபத்தில் உயிரிழந்த ஸ்ரீகாந்த் கோவை, பீளமேடு பகுதியைச் சோ்ந்த மதியழகன் மகன் என்பதும், பி.இ. நான்காம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.

இது குறித்து வால்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com