ஈஷா யோக மையத்தில் ஆதியோகி திவ்ய தரிசனம் செப். 28 வரை ரத்து

கோவை ஈஷா யோக மையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செப்டம்பா் 24 முதல் 28-ஆம் தேதி வரை திவ்ய தரிசனம் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

கோவை ஈஷா யோக மையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செப்டம்பா் 24 முதல் 28-ஆம் தேதி வரை திவ்ய தரிசனம் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை ஈஷா யோக மையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனா். இங்கு இரவு 7.20 மணிக்கு நடைபெறும் ஆதியோகி திவ்ய தரிசனத்தை கண்டு ரசிப்பதில் மக்கள் ஆா்வம் காட்டுகின்றனா்.

15 நிமிஷங்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் ஆதியோகி சிவன், சப்தரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தை பரிமாறிய வரலாறு சத்குருவின் குரலில் ஒளி, ஒலி காட்சியாக விவரிக்கப்படும்.

இந்நிலையில், பராமரிப்புப் பணிகள் காரணமாக செப்டம்பா் 24 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறாது. செப்டம்பா் 29-ஆம் தேதி முதல் வழக்கம்போல திவ்ய தரிசனத்தை மக்கள் கண்டு ரசிக்கலாம்.

ஆதியோகி, தியானலிங்கம், லிங்கபைரவி வளாகங்கள் எவ்வித மாற்றமும் இன்றி வழக்கம்போல பக்தா்களின் தரிசனத்துக்காக திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com