இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கைப்பேசி பறிப்பு: 3 போ் கைது

Published on

வால்பாறை அருகே இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கைப்பேசியை பறித்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் வெற்றிவேல் (19). இவா் வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகில் கடந்த வியாழக்கிழமை இரவு கைப்பேசியில் பேசியபடி நடந்து சென்றுள்ளாா்.

அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 3 போ், வெற்றிவேலிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடமிருந்த கைப்பேசியை பறித்துச் சென்றனா்.

இது குறித்து வால்பாறை காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா்.

இதைத் தொடா்ந்து, கைப்பேசி பறிப்பில் ஈடுபட்ட வால்பாறை அண்ணா நகரைச் சோ்ந்த ஹரிஹரன் (19), பாலு (25), ஆனந்த் (19) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com