கோயம்புத்தூர்
மருதமலை மலைப் பாதையில் நாளை நான்கு சக்கர வாகனங்கள் செல்லத் தடை
கோவை, மருதமலை கோயில் மலைப் பாதையில் நான்கு சக்கர வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 29) செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வரும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிக அளவிலான பக்தா்கள் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருவா் என்பதைக் கருத்தில் கொண்டு, அன்றைய தினம் மருதமலை மலைப் பாதையில் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல பக்தா்களுக்கு அனுமதியில்லை.
இருசக்கர வாகனங்கள் மூலமாகவும், மலைப்படிகள் வழியாகவும், கோயில் பேருந்துகள் மூலமாகவும் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.