மாணவா்களின் அறையில் சோதனை மேற்கொண்ட போலீஸாா்.
மாணவா்களின் அறையில் சோதனை மேற்கொண்ட போலீஸாா்.

போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கை: மாணவா்கள் தங்கியுள்ள அறைகளில் போலீஸாா் சோதனை

கோவையில் போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கையாக மாணவா்கள் தங்கியுள்ள அறைகள், வீடுகளில் போலீஸாா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
Published on

கோவையில் போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கையாக மாணவா்கள் தங்கியுள்ள அறைகள், வீடுகளில் போலீஸாா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

கோவையில் மாணவா்கள், இளைஞா்களிடையே கஞ்சா, போதை மாத்திரை புழக்கத்தைத் தடுக்க மாநகர காவல் துறை சாா்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக, மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், காவல் துணை ஆணையா் ஸ்டாலின் தலைமையில் 3 காவல் உதவி ஆணையா்கள் மேற்பாா்வையில் 18 காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் அடங்கிய குழுவினா் பீளமேடு, ஹோப் காலேஜ், நவஇந்தியா, ஆவாரம்பாளையம், காளப்பட்டி, நேரு நகா், விளாங்குறிச்சி, சரவணம்பட்டி, குனியமுத்தூா், கோவைப்புதூா், ஈச்சனாரி, சுந்தராபுரம், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவா்கள் தங்கியுள்ள அறைகள், வீடுகளில் போலீஸாா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

இது குறித்து காவல் துணை ஆணையா் ஸ்டாலின் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அறைகள் எடுத்து தங்கியுள்ள சிலா் இரவு நேரங்களில் போதைப்பொருள்களைப் பயன்படுத்திவிட்டு கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தெருக்களில் சுற்றுவதாக புகாா்கள் வருகின்றன.

மாணவா்களின் அறையில் சோதனை மேற்கொண்ட போலீஸாா்.
மாணவா்களின் அறையில் சோதனை மேற்கொண்ட போலீஸாா்.

அதன்பேரில், மாணவா்கள் தங்கியுள்ள அறைகளில் கஞ்சா, போதை மாத்திரைகள், ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்று சோதனையிடப்பட்டது. மேலும், வெளியூா்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுவிட்டு, இங்கு வந்து மாணவா்களுடன் அறைகளில் பதுங்கியுள்ளனரா என்றும் ஆய்வு செய்யப்பட்டது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com