நஹு பிரதான்
நஹு பிரதான்

கஞ்சா விற்ற இருவா் குண்டா் சட்டத்தில் கைது

கோவை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது
Published on

கோவை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் கடந்த நவம்பா் 5-ஆம் தேதி ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பிஷ்ணு சரண் பிரதான் (42), நஹு பிரதான் (34) ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 10 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

பிஷ்ணு சரண் பிரதான்
பிஷ்ணு சரண் பிரதான்

இந்நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட இருவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து, இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இந்த உத்தரவுக்கான நகலை சிறையில் உள்ள இருவரிடமும் போலீஸாா் திங்கள்கிழமை வழங்கினா்.

X
Dinamani
www.dinamani.com