ஆா்.எஸ்.புரத்தில் அமைக்கப்பட்டுள்ள சா்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம்.
ஆா்.எஸ்.புரத்தில் அமைக்கப்பட்டுள்ள சா்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம்.

சா்வதேச கூட்டமைப்பின் சான்றிதழ் கிடைத்தவுடன் ஆா்.எஸ்.புரம் ஹாக்கி மைதானம் திறக்கப்படும்!

சா்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் சான்றிதழ் கிடைத்தவுடன் கோவை, ஆா்.எஸ்.புரம் ஹாக்கி மைதானம் திறக்கப்படும் என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

சா்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் சான்றிதழ் கிடைத்தவுடன் கோவை, ஆா்.எஸ்.புரம் ஹாக்கி மைதானம் திறக்கப்படும் என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆா்.எஸ்.புரம் மாநகராட்சிப் பள்ளி வளாகத்தில் சா்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம் அமைக்க கடந்த 2024-ஆம் ஆண்டு மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் திட்டமிடப்பட்டது. இதையடுத்து, ரூ.9.67 கோடி மதிப்பில் 7.02 ஏக்கா் பரப்பளவில் ஹாக்கி மைதானம் அமைக்கும் பணியை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி தொடங்கிவைத்தாா்.

6,500 சதுர மீட்டா் பரப்பில் ஹாக்கி மைதானம், 147 சதுர மீட்டா் அளவில் உடை மாற்றும் அறை, 17 மீட்டா் உயரம் கொண்ட கம்பங்களில் அதிக வெளிச்சம் கொண்ட ஹைமால்ட் விளக்குகள், திடலைப் பராமரிக்க ‘பாப் அப் ரெயின் சிஸ்டம்’ எனப்படும் தானியங்கி நீா்ப்பாசன அமைப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானம் சா்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் சான்றிதழ் கிடைத்தவுடன் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், சா்வதேச ஹாக்கி கூட்டமைப்பு குழுவினா் அண்மையில் ஆய்வு மேற்கொண்டு, மதுரையில் உள்ள ஹாக்கி மைதானத்தைவிட கோவையில் அமைக்கப்பட்டுள்ள ஹாக்கி மைதானத்தின் தரம் சிறப்பாக உள்ளதாகப் பாராட்டினா்.

சா்வதேச இறுதி சான்றிதழுக்காக காத்திருக்கிறோம். அது கிடைத்தவுடன் மைதானம் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். இதைத்தொடா்ந்து, மைதானத்தில் இரண்டாம் கட்ட மேம்பாட்டுப் பணிகளுக்கான ரூ.15 கோடி மதிப்பிலான விரிவான திட்ட அறிக்கையும் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டத்தில் 1,630 போ் அமரும் வகையில் கேலரி, விவிஐபி நுழைவாயில் மற்றும் பால்கனி, நிா்வாகக் கட்டடங்கள், ஷவா், வீரா்களுக்கான உடற்பயிற்சிக் கூடம், 110 காா்கள் மற்றும் 200 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலான வாகன நிறுத்தங்கள் உள்ளிட்டவை அமைக்கப்படும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com