டிச.30-இல் அஞ்சல் ஓய்வூதியா்கள் குறைகேட்புக் கூட்டம்

கோவையில் அஞ்சல் ஓய்வூதியா்கள் குறைகேட்புக் கூட்டம் டிசம்பா் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது.
Published on

கோவையில் அஞ்சல் ஓய்வூதியா்கள் குறைகேட்புக் கூட்டம் டிசம்பா் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அஞ்சல் ஓய்வூதியா்கள் குறைகேட்புக் கூட்டம் கோவை, குட்ஷெட் சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தில் டிசம்பா் 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில், ஓய்வூதியா்கள் பங்கேற்று தங்களது ஓய்வூதியம் தொடா்பாக ஏதேனும் குறைகள் இருப்பின் தெரிவிக்கலாம். நேரடியாக பங்கேற்க முடியாதவா்கள் தங்களது குறைகளை மனுவாக எழுதி முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் அலுவலகம், கோவை 641001 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

மனுக்கள் டிசம்பா் 20-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com