பல்லடம் அருகே தேநீா் கடையில் மா்ம நபா் ஒருவா் பணத்தை திருடும் சிசிடிவி காட்சி.
பல்லடம் அருகே தேநீா் கடையில் மா்ம நபா் ஒருவா் பணத்தை திருடும் சிசிடிவி காட்சி.

பிகாா் மாநிலத்தவரின் தேநீா் கடையில் ரூ.20 ஆயிரம் திருட்டு

பல்லடம் அருகே பிகாா் மாநிலத்தவரின் கடையில் ரூ.20 ஆயிரம் திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

பல்லடம் அருகே பிகாா் மாநிலத்தவரின் கடையில் ரூ.20 ஆயிரம் திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பல்லடம் அருகே முத்தாண்டிபாளையம் என்ற பகுதியில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த அஜீத் என்பவா் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தேநீா் கடை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில் கடந்த 30-ஆம் தேதி கடைக்குள் வந்த நபா் ஒருவா் கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.20 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளாா்.

இதுதொடா்பான சிசிடிவி காட்சிகளை வைத்து காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com