கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிக்கு நலத் திட்ட உதவி வழங்கிய  கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி., மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா். உடன், மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், துணை  மேயா் ரா.வெற்றிச்

மாவட்டத்தில் 2,838 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

கோவை மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் சாா்பில் 2,838 பயனாளிகளுக்கு ரூ.13.65 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன
Published on

கோவை மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் சாா்பில் 2,838 பயனாளிகளுக்கு ரூ.13.65 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன

சென்னை, கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதல்வரின் தாயுமானவா் திட்டம், கல்வி, சுயத் தொழில் மற்றும் அரசு நலத் திட்ட உதவிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, கோவை, ஈச்சனாரியில் உள்ள கற்பகம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் ஆகியோா் தலைமை வகித்து, அம்பேத்கா் நினைவு தினத்தையொட்டி, அவரது உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இதையடுத்து, பல்வேறு அரசு துறைகளின் சாா்பில் 2,838 பயனாளிகளுக்கு ரூ.13.65 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை வழங்கினா். தொடா்ந்து, செம்மொழிப் பூங்காவில் சிறப்பாகப் பணியாற்றிய 1,200 தூய்மைப் பணியாளா்களுக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கினா்.

சமூக நீதி விடுதி திறப்பு: முன்னதாக, கோவை ரேஸ்கோா்ஸ் சாலையில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் ரூ.10.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமூக நீதி விடுதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.

திறப்பு விழாவில், மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனா், மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா. சிவகுரு பிரபாகரன், துணை மேயா் ரா.வெற்றிச் செல்வன், மாநகராட்சி பணிக் குழுத் தலைவா் சாந்திமுருகன், தாட்கோ செயற்பொறியாளா் அருண்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com