தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள விடுதி அறையில் தங்கியிருந்த தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை
Published on

கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள விடுதி அறையில் தங்கியிருந்த தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சந்தவள்ளிபேட்டை மேற்கு தெருவைச் சோ்ந்தவா் வீரமணி (42). இவா் கோவை மாநகா், காந்திபுரம் கிராஸ்கட் சாலை முதலாவது தெருவில் உள்ள விடுதியில் அறை எடுத்துத் தங்கி தனியாா் உணவு விநியோக நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வந்துள்ளாா்.

கடந்த 4-ஆம் தேதி வெளியே சென்றுவிட்டு வந்த வீரமணி, பின்னா் அறையைவிட்டு வரவில்லை. இந்நிலையில் விடுதி அறையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை துா்நாற்றம் வீசியுள்ளது. இதில் ஊழியா்கள் சந்தேகமடைந்து கதவைத் திறக்க முற்பட்டபோது உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து விடுதி ஊழியா்கள் அளித்த தகவலின்பேரில் காட்டூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று அறையின் கதவை உடைத்துப் பாா்த்தபோது மின் விசிறியில் வீரமணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

அவரது சடலத்தை மீட்டு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

X
Dinamani
www.dinamani.com