கோயம்புத்தூர்
நாளைய மின்தடை: குமரன் சாலை துணை மின்நிலையம்
திருப்பூா் மின் பகிா்மான வட்டம், குமரன் சாலை துணை மின் நிலையத்தில் உயா் மின்னழுத்த கம்பம் மற்றும் மின்பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை ( நவம்பா் 3)
நண்பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக செயற்பொறியாளா் க.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
திருப்பூா் பழைய பேருந்து நிலையம், குமரன் ரோடு, வாலிபாளையம், யூனியன் மில் ரோடு, ஊத்துகுளி ரோடு, பெரியகடை வீதி, நடராஜ் தியேட்டா் சாலை.
